Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மூன்றாவது அலையின் எழுச்சியுடன், போலி கொரோனா மருந்துகளும் அதிகரிப்பு!

T

The Leader Desk

மே 5, 2021 • 8:06 AM

மூன்றாவது அலையின் எழுச்சியுடன், போலி கொரோனா மருந்துகளும் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற வெளிநாட்டு மருந்துகளை பரிசோதிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய மருந்து வகைகள் மற்றும் ஏனைய சிகிச்சை முறைகள் தொடர்பில் அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம், மாகாண ஆயுர்தேச திணைக்களம், மற்றும் சமுதாய சுகாதார வைத்தியர்கள் தெளிவுபடுத்துவார்கள் என இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
  • தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது கொரோனாவுக்கு சிகிச்சை என விளம்பரம் செய்யப்பட்ட 'தம்மிக பாணி' என்ற பானத்தை உட்கொண்ட சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தொற்று ஏற்பட்டதோடு, இப்போது மேற்கத்தேய வைத்தியத்தின் பின்னர் குணமடைந்துள்ளார்.
எழுத்து அளவு:

கொரோனாவின் மூன்றாவது அலையின் பாதிப்பு அதிகரிப்பால், தொற்றுக்கான மருந்து என்ற அறிவித்தலுடன் சுதேச வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப்  பொருட்களுடன் கூடிய மருந்துச் சீட்டுகள் கடந்த காலத்தைவிட அதிகமாகவும், வேகமானவும் பரவி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக  சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற வெளிநாட்டு மருந்துகளை பரிசோதிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது கொரோனாவுக்கு சிகிச்சை என  விளம்பரம் செய்யப்பட்ட 'தம்மிக பாணி' என்ற பானத்தை உட்கொண்ட சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தொற்று ஏற்பட்டதோடு, இப்போது மேற்கத்தேய வைத்தியத்தின் பின்னர் குணமடைந்துள்ளார்.

ஆயுர்வேதம் மற்றும் சுதேச வைத்தியத்தில் ஒரு நோய்க்கான மருந்தை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பில் கருத்தில் கொள்வது அவசியமானது என  அவரது அனுசரணையில் இயங்கும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த மருந்துகளுக்கு ஒரு மூலிகை மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டால், தாவரத்தின் எந்த பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு காணப்படுவது  மிகவும் முக்கியம் என அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ஒரு மருந்து தயாரிப்பில் ஒரு தாவரத்தின் பட்டை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் அந்த தாவரத்தின் பழத்தைப் பயன்படுத்துவது மருந்தின் சரியான பயனப்பெற முடியாது என்பதோடு, அது  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் சேர்வதற்கும் வழிவகுக்கும்."

ஆகவே பாரம்பரிய கை வைத்தியங்களைத் தவிர ஏனயை மருந்துகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கிறது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய மருந்து வகைகள் மற்றும் ஏனைய சிகிச்சை முறைகள் தொடர்பில் அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம், மாகாண ஆயுர்தேச திணைக்களம், மற்றும் சமுதாய சுகாதார வைத்தியர்கள் தெளிவுபடுத்துவார்கள் என இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமென இராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...