Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது! பிரசன்ன ரணதுங்க

T

The Leader Desk

மே 4, 2021 • 3:15 PM

சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது! பிரசன்ன ரணதுங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வருவதை நிறுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • அவ்வாறு செய்வதாக இருந்தால், சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு குழு இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அங்கிருந்து எயார் பபல்ஸ் திட்டம் முறையில் இலங்கைக்கு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு நாங்கள் தான் இந்தியாவிடம் கோரியிருந்தோம்.
எழுத்து அளவு:

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வருவதை நிறுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அங்கிருந்து எயார் பபல்ஸ் திட்டம் முறையில் இலங்கைக்கு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு நாங்கள் தான் இந்தியாவிடம் கோரியிருந்தோம்.

என்றாலும் இந்தத் திட்டம் ஆரம்பித்து சில தினங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மோசமான நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது நாங்கள் நிலைமையை உணர்ந்து இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதைக் குறைத்திருக்கின்றோம். அவர்கள் இலங்கைக்குள் வரமுடியாத வகையில் எமது கட்டுப்பாடுகளை அமைத்திருக்கின்றோம். அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது.

அவ்வாறு செய்வதாக இருந்தால், சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு குழு இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும். என்றாலும் எயார் பபல்ஸ் முறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதாக இருந்தால் அவர்கள் எமது நாட்டில் தங்குவதற்கு ஹோட்டல் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.

இலங்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டல் வசதிகளை வழங்குவதற்கு அதிகமானவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளனர். அதனால், அவர்களின் வருகை குறைவடைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான படகு போக்குவரத்தும் குறைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான ஏற்றுமதிகளும் குறைவடைந்துள்ளன எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது! பிரசன்ன ரணதுங்க | Tamil Leader | We Lead the Nation