Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரிஷாட்டின் கைது எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது! அப்துல்லா மஹ்ரூப்

T

The Leader Desk

மே 4, 2021 • 9:12 AM

ரிஷாட்டின் கைது எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது! அப்துல்லா மஹ்ரூப்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நேற்று (03) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • “அவரையும் அவரது சகோதரரையும் ஜனாதிபதி ஆணைக்குழு பலமுறை விசாரணை செய்துள்ளது.
  • அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ரிஷாட்டின் கைது இந்த நாட்டில் வாழ்கின்ற எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நேற்று (03) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ரிஷாட்டின் கைது இந்த நாட்டில் வாழ்கின்ற எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது.

“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். எனினும், புனித ரமழான் காலத்தில் நடுநிசியில் கைதாவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இது விடயத்தில் கவனம் எடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும். குற்றங்கள் ஏதும் இருப்பின், நீதிமன்றத்துக்கு முன் நிறுத்துங்கள்.

“அவரையும் அவரது சகோதரரையும் ஜனாதிபதி ஆணைக்குழு பலமுறை விசாரணை செய்துள்ளது. அவர்களால் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவிதக் குற்றமுமற்றவர் என்றிருந்த போது, அநியாயக் கைது இடம்பெற்றுள்ளது.

“சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். எமது சமூகம் ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு துணை போனதும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தை பழிவாங்க நினைக்க வேண்டாம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...