Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசன்! டளஸ்

T

The Leader Desk

மே 3, 2021 • 6:44 AM

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசன்! டளஸ் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
  • அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • இவ்விரு நிறுவனங்களும் மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22 ஆயிரம் லீட்டர் ஒட்சிசன் சிலிண்டர்களை சாதாரண தேவைக்கான உற்பத்தி செய்கின்றன.
  • தற்போது அந்த உற்பத்தி 67 ஆயிரம் லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மருத்துவ துறைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இவ்விரண்டு நிறுவனங்களிடமும் உற்பத்தி தொடர்பில் மதிப்பீட்டு அறிக்கையினை கோரினார்.

இவ்விரு நிறுவனங்களும் மருத்துவ துறைக்கு ஒரு நாளைக்கு தேவையான 22 ஆயிரம் லீட்டர் ஒட்சிசன் சிலிண்டர்களை சாதாரண தேவைக்கான உற்பத்தி செய்கின்றன. தற்போது அந்த உற்பத்தி 67 ஆயிரம் லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 15 ஆயிரம் லீற்றர் ஒட்சிசன் சிலின்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே மருத்துவ துறையில் ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படவில்லை.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை தேவையான அளவு மேலதிகமான இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் தொடர்பிலும் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் அவசர சிகிச்சை கட்டில்கள் இல்லாத காரணத்தினால் உயிரிழக்கவில்லை. ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதால் அங்கு மரணங்கள் பெருமளவில் தற்போது பதிவாகியுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டடுள்ள நெருக்கடி நிலையை வெற்றி கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இப்பிரச்சினையை நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தேசிய பிரச்சினையாக கருத வேண்டும். சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை அனைவரும் முழுமையாக பின்பற்றுவது அத்தியாவசிய கடமையாகவே கருதப்படும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசன்! டளஸ் | Tamil Leader | We Lead the Nation