Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அரவிந்தகுமார் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்!

T

The Leader Desk

மே 2, 2021 • 5:02 PM

அரவிந்தகுமார் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தொழிலாளர் முன்னணி என அந்த கட்சிக்கு அவர் பெயரிட்டுள்ளார்.
  • எனினும் ராதாகிருஸ்ணன் அணியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து அவர் அரவிந்தகுமாருடன் இணைந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.
  • இந்நிலையில் 20வது திருத்தச் சட்டத்திற்கு அரவிந்தகுமார் ஆதரவு வழங்கியதால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் பின் பதுளை மாவட்டத்தில் இராதாகிருஸ்ணன் தனியாகவும் அரவிந்தகுமார் தனியாகவும் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஐக்கிய தொழிலாளர் முன்னணி என அந்த கட்சிக்கு அவர் பெயரிட்டுள்ளார். இது கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயற்படும் என தெரியவருகிறது.

இந்த புதிய கட்சியின் நிழ்ல் தலைவராக அரவிந்தகுமார் செயற்பட உள்ளார். மலையக மக்கள் முன்னணியில் இருந்து தான் விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதால் நிரந்தர தலைவராக அவர் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளராக அரவிந்தகுமாரின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக அஜித்குமார் நியமிக்கப்படவுள்ளார்.

அமரர் சந்திரசேகரன் அவர்களின் பிரத்தியேக உதவியாளராக செயற்பட்ட அஜித்குமார் பின்னர் இராதாகிருஸ்ணனின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். எனினும் ராதாகிருஸ்ணன் அணியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து அவர் அரவிந்தகுமாருடன் இணைந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.

மேலும் அரவிந்த குமார் தலைமையிலான புதிய கட்சியின் நிர்வாக செயலாளராக பசறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் சிரேஸ்ட உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அமைப்பாளராக பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷர்மிலா என்ற பெண் நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்பது அரவிந்தகுமாரால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் இந்த ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஆகிய இரண்டுமே ஆங்கிலத்தில் சுருக்கமாக யுபிஎப் (UPF) என்றே அழைக்கப்படும்.

அரவிந்தகுமார் மிகவும் சூட்சமமான முறையில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியை உருவாக்கி மலையக தொழிலாளர் முன்னணிக்கு பெற்ற சந்தா பணத்தை தமது  ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற கட்சிக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியின் தலைமை பல இடங்களில் கருத்து வௌியிட்டு இருந்தது. இந்நிலையில் 20வது திருத்தச் சட்டத்திற்கு அரவிந்தகுமார் ஆதரவு வழங்கியதால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் பின் பதுளை மாவட்டத்தில் இராதாகிருஸ்ணன் தனியாகவும் அரவிந்தகுமார் தனியாகவும் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுஷா சந்திரசேகரன் விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது அரவிந்தகுமார் புது கட்சி தொடங்கியுள்ளார். அதன்படி மலையக மக்கள் முன்னணி இன்று மூன்று அணியாக பிளவுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரவிந்தகுமார் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்! | Tamil Leader | We Lead the Nation