Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசுக்கு அறிவுரை!

T

The Leader Desk

மே 2, 2021 • 3:47 PM

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசுக்கு அறிவுரை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தொற்றுநோய் மூன்றாவது அலையை முறையாக கட்டுப்படுத்தும் பொறுப்பில் இராணுவத் தளபதி முன்னிலை வகிக்கின்ற நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்த 10 விடயங்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
  • ஏப்ரல் 29, வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • சோதனை திறன் மற்றும் திடீர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதனை வலுப்படுத்தல் 03.
எழுத்து அளவு:

கொரோனா தொற்றுநோய் மூன்றாவது அலையை முறையாக கட்டுப்படுத்தும் பொறுப்பில் இராணுவத் தளபதி முன்னிலை வகிக்கின்ற நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்த 10 விடயங்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.

எனினும், இதில் இராணுவத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளதா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

வெளிநாட்டினரை தனிமைப்படுத்துவதற்கு நாட்டை பயன்படுத்துவதால் புதிய வைரஸ்கள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் காணப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் 29, வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் குறித்த விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை ஆராய்ந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க பங்களிப்பின் மூன்று முக்கிய கூறுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் பங்களிப்பு,

சுகாதார சேவையின் செயல்திறன் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகிய மூன்று முக்கிய கூறுகள் சிறப்பாக செயற்படுவதன் முக்கியத்துவத்தை அந்த சங்கம் எடுத்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பல்வேறு நாடுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதோடு, தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பல நாடுகள் பின்பற்றிய முறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுட்டிக்காட்டியதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

01. தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கண்டிப்பாக அமுல்படுத்துவதன் மூலமும், இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் அபாயங்களை துல்லியமாக கண்டறிவதற்கும் பொது மக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளல்.

02. சோதனை திறன் மற்றும் திடீர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம்  அதனை வலுப்படுத்தல்

03. தேவைக்கேற்ப பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சுகாதார கட்டுப்பாடுகள் மீறப்படுவதை தடுத்தல்

04. தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இஸ்ரேல் போன்ற சில நாடுகளால் முடிந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்வரும் திட்டங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

01. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் திடீர் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளல் அதனை வலுப்படுத்துதல் மற்றும் கொத்தணி தொற்று மற்றும் தொற்றுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்து தாமதமின்றி பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்.

02. உள்ளூர் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான சரியான பொறிமுறையை நிறுவுவதன் மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல்.

03. தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளின் வழிகாட்டுதலைப் புதுப்பித்தல். அறிகுறிகள் இல்லாத நோயாளிகள்,  பிற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் மற்றும் அறிகுறி நோயாளிகளின் குழுவை சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கும் கொள்கையை மதிப்பாய்வு செய்தல்.

04. நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பித்தல்.

05. தீவிர சிகிச்சை பிரிவுகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் கட்டில்களின் அளவை அதிகரிக்க குறுகிய மற்றும் நீண்ட கால பொறிமுறையை கண்டறிதல்.

06. தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான ஒட்சிசன் சேமிப்பை உறுதி செய்தல் மற்றும் திறமையான விநியோக முறையை உறுதி செய்தல்.

07. தற்போது வைத்தியர் பற்றாக்குறை உள்ள வைத்தியசாலைகளுக்கு நியமனங்களை எதிர்பார்க்கும் வைத்தியர்களை நியமித்தல்.

08. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் ஏற்படும் அபாயங்களை பொதுமக்களுடன் சரியாக பகிர்ந்துகொள்ளல்.

09.கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்த தேவையான பொது ஒழுக்கத்தை உறுதிப்படுத்துதல்.

10. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை பயனுள்ளதாக்குதல்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...