Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனையில் ரிஷாத்தின் கைதுக்கு எதிராக போராட்டம்! video

T

The Leader Desk

மே 2, 2021 • 12:11 PM

நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனையில் ரிஷாத்தின் கைதுக்கு எதிராக போராட்டம்! video

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வுத்தரவை கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சுஜித் பிரியந்த பெயர் குறித்தவர்களிடம் கையளித்தார்.
  • கல்முனை பொலிஸாரின் கெடுபிடியினால் அங்கிருந்து வெளியாகி சென்ற போராட்டக்காரர்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய் , ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே !.
  • நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனை நகர் மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அம்பாறையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றனர் .
எழுத்து அளவு:

இவ்வுத்தரவை கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சுஜித் பிரியந்த பெயர் குறித்தவர்களிடம் கையளித்தார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி கல்முனை நகர் மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அம்பாறையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றனர் . தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய் , ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே !. ரிஷாத்தை நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன ?, யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கைது ? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமெழுப்பிய போது கல்முனை பொலிஸார் புகுந்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுடன் சுலோகங்களை பறித்து போராட்டக்காரர்களுக்கு கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனையும் செய்தனர்.

கல்முனை பொலிஸாரின் கெடுபிடியினால் அங்கிருந்து வெளியாகி சென்ற போராட்டக்காரர்கள் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தலைவர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய் , ரிஷாத்தை அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே !. ரிஷாத்தை நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன ?, யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கைது ? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமெழுப்பி நீளமான பதாதைகளை தாங்கியவாறு . சமூக இடைவெளிகளைப் பேணி இந்தப் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்து மேற்கொண்டனர் .இதன் போது ரிஷாத்தின் கைதுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுனபின், அகில மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் உட்பட பலரும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர் .

புத்தளத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் வீடியோ..

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...