Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வேகமாக பரவி வரும் கொரோனா! நாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

T

The Leader Desk

மே 1, 2021 • 5:03 PM

வேகமாக பரவி வரும் கொரோனா! நாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கொவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.
  • இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.
எழுத்து அளவு:

புதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கொவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்

பொது போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

வாடகை வாகன பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும். இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும். வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.

ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது. அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகை தரவேண்டும்.

​தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.

மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.

அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.

மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது.

கைதிகளை பார்வையிட முடியாது.​

நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகை தரமுடியும்.​

இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுத்தடை. மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.​

மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்​கொண்டு அது திருத்தப்படும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வேகமாக பரவி வரும் கொரோனா! நாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation