Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்த ஆண்டின் நாடாளுமன்ற வருகை இதோ!

T

The Leader Desk

மே 1, 2021 • 7:01 AM

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்த ஆண்டின் நாடாளுமன்ற வருகை இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதில் இல்லை.முஸ்லிம் எம்.பி.
  • நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2020 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச் வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை தரவுகளின் அடிப்படையில் Manthri.lk இல் வெளிவந்துள்ளது.
  • இத்தகவலின் படி, இலங்கை நாடாளுமன்றத்தில் 100% வருகை யை பதிவு செய்த 14 எம்.பி.க்களில் பெரும்பான்மையானவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
  • Manthri.lk வலைத்தள தகவளின்படி, சமகி ஜன பலவேகய கட்சியின், சாமிந்த விஜேசிரி, கயந்த கருணாதிலக, ஹேஷா விதானகே, லக்ஸ்மன் கிரியெல்ல,முஜிபுர் ரஹ்மான் ஆகிய ஐந்து உறுப்பினர்கள் 2020 ஆகஸ்ட் முதல் மார்ச் 2021 வரை ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்றுள்ளனர்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதில் இல்லை.முஸ்லிம் எம்.பி. ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2020 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச்  வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை தரவுகளின் அடிப்படையில் Manthri.lk இல் வெளிவந்துள்ளது.

50

இத்தகவலின் படி, இலங்கை நாடாளுமன்றத்தில் 100% வருகை யை பதிவு செய்த 14 எம்.பி.க்களில் பெரும்பான்மையானவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் ஐந்து பேர் சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், மீதமுள்ள ஒன்பது பேர் சிறீலங்கா பொதுஜன பெரமுவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இரண்டு தேசிய பட்டியல் எம்.பி.க்களும் உள்ளனர்.

Manthri.lk வலைத்தள தகவளின்படி, சமகி ஜன பலவேகய கட்சியின், சாமிந்த விஜேசிரி, கயந்த கருணாதிலக, ஹேஷா விதானகே, லக்ஸ்மன் கிரியெல்ல,முஜிபுர் ரஹ்மான் ஆகிய ஐந்து உறுப்பினர்கள் 2020 ஆகஸ்ட் முதல் மார்ச் 2021 வரை ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பிரதிநிதிகளான கயாஷன் நவநந்தா, ஜகத் குமாரா, மதுர விதானகே, மஹிந்த யாப்ப அபேவர்தன, சாகர கரியவாசம், சாந்த பண்டார, சுதத் மஞ்சுல, உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் யாதமினி குணவர்தன ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.

50% குறைவான வரவு

100

நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான Manthri.lk இன்  தகவலின்படி, ஆகஸ்ட் 2020 முதல் மார்ச் 2021 வரை நடைபெற்ற 63 அமர்வுகளின் 11 உறுப்பினர்களைக் கொண்ட வாக்குப்பதிவில் 50% க்கும் குறைவாக இருப்பதைக் காட்டுவதாக Manthri.lk வலைத்தளம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஏழு பேர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். மீதமுள்ளவர்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள். அதில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லை.

ராஜவரோதயம் சம்பந்தனுக்கு 20 சதவீதமும், விஜயதாச ராஜபக்ஷவுக்கு 30 சதவீதமும் உள்ளது.

மேலும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 36%, பழணி திகாம்பரம் 38%, டிரான் அலெஸ் 44%, சு. நோகரடலிங்கம் 46%, சிவனேசதுரை சந்திரகாந்தன் 46%, திலும் அமுனுகம 48%, விமல் வீரவன்ச 48%, சி.வி.விக்னேஸ்வரன் 49%, ஜீவன் தொண்டமன் 49% என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

50 சதவீதத்திற்கும் குறைவான வரவுகளைக் கொண்ட சிங்கள எம்.பி.க்கள் அனைவரும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...