Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2021 • 10:55 AM

கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர்கள், முதலில் ரத்த தானம் செய்துவிட்டு, பின்னர் தடுப்பூசி போட்டுகொண்டால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை குறைக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
  • தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.
  • மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு போதிய இடைவெளி விட்ட பிறகே ரத்த தானம் செய்ய முடியும் என்பதால் அவர்களால் சுமார் 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.
  • ''2019ல் நாங்கள் 12,000 யூனிட் ரத்தம் சேமித்தோம்.
எழுத்து அளவு:

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர்கள், முதலில் ரத்த தானம் செய்துவிட்டு, பின்னர் தடுப்பூசி போட்டுகொண்டால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை குறைக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் செயற்பட்டு வருகின்றன. அதோடு, பல தன்னார்வ அமைப்புகளும் ரத்த தான முகாம்கள் நடத்தி ரத்த வங்கிகளில் சேமிக்கின்றன.

ஆனால் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் தன்னார்வலர்கள் பலர் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளதால், ரத்த தானம் செய்யவில்லை.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு போதிய இடைவெளி விட்ட பிறகே ரத்த தானம் செய்ய முடியும் என்பதால் அவர்களால் சுமார் 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.

சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கியில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிபவர் மரு.ரவீந்திரன். கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தடுப்பூசி இல்லாததாலும், தன்னார்வலர்கள் பலரும் ரத்த தானம் செய்ய முன்வரவில்லை என்கிறார் அவர்.

''2019ல் நாங்கள் 12,000 யூனிட் ரத்தம் சேமித்தோம். 2020ல் வெறும் 3,500 யூனிட் மட்டுமே சேமிக்க முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 150 ரத்த தான முகாம்களை நாங்கள் நடத்துவோம். ஆனால் கடந்த ஆண்டு வெறும் 65 முகாம்கள் மட்டுமே நடத்தமுடிந்தது. கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 சதவீதம் ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைந்தது. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் என்பது வெளிப்படை,'' என்கிறார் ரவீந்திரன்.

குறிப்பாக 18 முதல் 45 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துவருவதால், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னர் ரத்த தானம் செய்துவிட்டு சென்றால், ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்கிறார் அவர்.

''உலக சுகாதார நிறுவனம் மற்றும் தேசிய ரத்த மாற்று கவுன்சில் வழிகாட்டுதலின் படி, ரத்த தானம் செய்தவர்கள் 48 மணிநேரம் அதாவது இரண்டு நாட்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இதனால், முதலில் ரத்த தானம் செய்துவிட்டால், பிறகு அந்தக் கொடையாளி தடுப்பூசியின் இரண்டு டோசும் போட்டுக் கொண்ட பின் 30 நாள் கழித்து மீண்டும் ரத்த தானம் செய்யலாம். இல்லாமல் கொடையாளிகள் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினால் அவர்கள் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு பிறகு 30 நாள் இடைவெளி விட்டு ரத்த தானம் செய்துகொள்ள தகுதியாகும் வரை ரத்த வங்கிகளில் வரத்து தட்டுப்பாடு ஏற்படலாம்,'' என்கிறார் ரவீந்திரன்.

''சாலை விபத்துகள் கடந்த ஆண்டு குறைவாக இருந்தது. பல அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. ரத்தத்தின் தேவை சிறிதளவு குறைந்திருந்தாலும், நம்மிடம் அவசிய தேவைக்கு இருக்கவேண்டிய அளவு ரத்த வங்கிகளில் இல்லை,'' என்கிறார் அவர்.

ரத்த தானம்.

தமிழ்நாடு முழுவதும் ரத்த தான முகாம் நடத்திவருபவர் தன்னார்வலர் ச.சரவணன். 'விழித்திடு,விதைத்திடு' என்ற அமைப்பின் மூலம் சுமார் 1,600 யூனிட் ரத்தத்தை அரசு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சரவணன் அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் அரிதான ரத்த வகையை கொண்ட நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ரத்தத்தை அளிப்பதில் சிரமம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

''ஏ நெகடிவ் மற்றும் ஏபி நெகடிவ் உள்ளிட்ட அரிதான ரத்த வகை கொண்ட நபர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைப்பது சிரமம். அரிதான ரத்த வகை கொண்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்னர், ரத்த தானம்செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்.

தடுப்பூசி முகாம்களுக்கு வருபவர்களிடம் ரத்த தானத்தின் அவசியத்தை உணர்த்தலாம். அதிலும், கொரோனா காலத்தில் ரத்த சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை விளக்கலாம். ரத்த தானம் செய்யவருபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மருத்துவமனைகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தருவது முக்கியம்,''என்கிறார் சரவணன்.

''ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை உடனடியாக அரசாங்கம் நிறுவுகிறது. ஆனால் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த தேவையை உடனடியாக தீர்க்க முடியாது. தடுப்பூசி முகாம்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரத்த தானத்திற்கு இப்போது தரவேண்டும்,'' என்றும் கூறுகிறார் அவர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு! | Tamil Leader | We Lead the Nation