Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார் குறித்து விசேட வைத்திய எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2021 • 9:31 AM

கர்ப்பிணித் தாய்மார் குறித்து விசேட வைத்திய எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  • கர்ப்பிணிப் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் பொதுமக்களுடன் நேரடியான தொடர்புகள் ஏற்படுவதாலும், அதிக ஊழியர்கள் உள்ள இடங்களில் பணியாற்றுவதாலும், தொற்றுநோய் பரவுவதற்கு இது வாய்ப்பாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • தற்போது பரவி வரும் கொரோனா வைரஸினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு குழுவாக கர்ப்பிணித் தாய்மார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு குழுவாக கர்ப்பிணித் தாய்மார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"கர்ப்பிணித் தாய்மார்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்களெனின், அவர்களைப் பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் இது மிகவும் துன்பகரமான விடயமாக மாறலாம்” என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் தலைவர் விசேட வைத்திய நிபுணர், பிரதீப் டி சில்வா புதன்கிழமை (28) வெளியிட்ட  ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான விடயமாக மாறியுள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பொதுவான சிக்கல்கள் நோய் பரவுவதற்கான பொதுவான காரணிகளாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் பொதுமக்களுடன் நேரடியான தொடர்புகள் ஏற்படுவதாலும், அதிக ஊழியர்கள் உள்ள இடங்களில் பணியாற்றுவதாலும், தொற்றுநோய் பரவுவதற்கு இது வாய்ப்பாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"Royal College of Obstetricians and Gynaecologists” என்ற பிரித்தானிய அரச நிறுவனம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதை பரிந்துரைத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என  இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் கருதுகிறது.

இந்த தடுப்பூசி கருவுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக,  இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா கூறியுள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் அவரை பரிசோதிக்க வேறொரு இடத்தை வழங்குவது முக்கியம் எனவும், இல்லாவிடின்  சாதாரண நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கர்ப்பிணித் தாய்மார் குறித்து விசேட வைத்திய எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation