Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

புலனாய்வுத் துறை விசாரணைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சத்தில்!

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2021 • 9:15 AM

புலனாய்வுத் துறை விசாரணைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "அப்படியானால் எங்களுடைய பாதுகாப்பு எங்கே?
  • இதுபோன்ற பல வியங்கள் எம் மனதில் உள்ளன." என மனித அபிவிருத்திக்கான புரட்சிகர இருப்பு (RED) அமைப்பின் சந்திர தேவநாராயண, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) கொழும்பில் இடம்பெற்ற, மக்கள் சக்தி அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
  • "அவர்களுக்கு எனது பிறப்பிலிருந்து இப்போது வரை தகவல்களைப் பெற வேண்டிய நோக்கம் இருந்துள்ளது.
எழுத்து அளவு:

"அப்படியானால் எங்களுடைய பாதுகாப்பு எங்கே? அந்த பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது? இதுபோன்ற பல வியங்கள் எம் மனதில் உள்ளன." என மனித அபிவிருத்திக்கான புரட்சிகர இருப்பு (RED) அமைப்பின் சந்திர தேவநாராயண,  செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) கொழும்பில் இடம்பெற்ற, மக்கள் சக்தி அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு ஒன்று தனது அலுவலகத்திற்கு தமது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக தொடர்பில் செயற்பட்டு வரும், சந்திர தேவநாராயண ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

"இந்த நபர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எங்கிருந்து உதவி பெறுகிறார்கள், அவர்கள் யாருடன் பணிபுரிகிறார்கள் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தமது வீட்டிற்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய தேவநாராயண, அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் தமது வீட்டிற்கு வந்து தனிப்பட்ட தகவல்களை சேகரித்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அவர்களுக்கு எனது பிறப்பிலிருந்து இப்போது வரை தகவல்களைப் பெற வேண்டிய  நோக்கம் இருந்துள்ளது. இறந்த பெற்றோர்களைப் பற்றிய தகவல்கள், இறந்த உடன்பிறப்புகள் பற்றிய தகவல்கள், கிராமத்தில் உள்ள உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அவர்களுக்கு அவசியமாக இருந்துள்ளது.”  என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய, இந்த தகவலை சேகரிப்பதாக பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையின் போது தன்னிடம் கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு வந்து உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அச்சுறுத்தல் விடுப்பதன் ஊடாக  தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் பிள்ளைகளை அச்சுறுத்துவதன் ஊடாக  தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது ஒரு பெரிய அடக்குமுறை திட்டத்திற்கு முன்னோடியாகும் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது சந்திர தேவநாராயண எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுவினரால் கிறிஸ்தவ மதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரகசிய அறிக்கை குறித்த தகவல்களை வழங்குமாறு சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்று கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

புலனாய்வுத் துறை விசாரணைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சத்தில்! | Tamil Leader | We Lead the Nation