Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

சில தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியலே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம்குறைத்து அனுப்பப்பட்ட கடிதமாகும்! இரா.சாணக்கியன்

T

The Leader Desk

ஏப்ரல் 28, 2021 • 5:04 PM

சில தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியலே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம்குறைத்து அனுப்பப்பட்ட கடிதமாகும்! இரா.சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(28)முற்பகல் 11.30 மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
  • தற்போது கொரோனா 3வது அலைக்கு இந்த அரசாங்கமே பெறுப்பேற்கவேண்டும்.
  • இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை(28)முற்பகல் 11.30 மணியளவில் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....

சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசும்பொருளாகவும்,மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

இந்தவிடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தணவிடம் எங்களுடைய  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளர் நியமனம் சம்பந்தமான பிரச்சினை 1993ஆம் ஆண்டு முதல் கணக்காளர் வெற்றிடமாக காணப்பட்டது.குறித்த பிரதேச செயலகத்திற்கு கணக்காளர்  நியமிக்கப்படாமையை முதன் முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் தலைமையில் ஒத்திவைக்கும் பிரேரணையில்  பாராளுமன்றத்தில் கதைத்திருந்தோம்.

இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும்,சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது.அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக்கூடாது என்றும்,செய்யக்கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது.இதனால் இப்போது அரசுடன் இணைந்திருக்கும் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என்பதற்கு இணங்க அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும்,கிழக்கிலே தமிழர்,முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும்,கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு அப்பிரச்சினை சம்பந்தமாக பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.இவ்வாறான அரசியல்வாதிகளை கல்முனை மக்களும்,அம்பாறை மாவட்ட மக்களும் இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெரியப்படுத்துகின்றேன்.

ஆனால் இன்று நாட்டிலே பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளில் தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும்,சமாதானமாகவும் செயற்படுகின்றார்கள்.கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களும்,முஸ்லிம்மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும்,முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும்,தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும்,அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம்குறைத்து அனுப்பப்பட்ட கடிதமாகும்.இவ்விடயமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளேன் எனத்தெரிவித்தார்.

தற்போது கொரோனா 3வது அலைக்கு இந்த அரசாங்கமே பெறுப்பேற்கவேண்டும்.

காரணம் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு கோரியும் செவிமடுக்கவில்லை சித்திரை புத்தாண்டு காலத்தில் பலரும் சுற்றுலா சென்றார்கள் இன்று நிலமை மோசமடைந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...