Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘IMF ஆவணத்தையே 2025க்கான பாதீடாக அரசாங்கம் முன்வைக்கிறது”

T

The Leader Desk

டிசம்பர் 20, 2024 • 5:03 PM

‘IMF ஆவணத்தையே 2025க்கான பாதீடாக அரசாங்கம் முன்வைக்கிறது”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தையே அரசாங்கம் வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
  • ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக, முன்னிலை சோசலிசக் கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் இன்று (20) நுகேகொடையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • “2025ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், எதிர்வரும் காலங்களில் வரவுள்ளது என்பதை நாம் அறிவோம்.
  • தற்போதைய செய்திகளின்படி, பிப்ரவரி 17-ம் திகதியன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எழுத்து அளவு:

என்று தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தையே அரசாங்கம் வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக, முன்னிலை சோசலிசக் கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் இன்று (20) நுகேகொடையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“2025ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், எதிர்வரும் காலங்களில் வரவுள்ளது என்பதை நாம் அறிவோம்.  தற்போதைய செய்திகளின்படி, பிப்ரவரி 17-ம் திகதியன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முன்னிலை சோசலிச கட்சி என்ற வகையில், இந்த வரவு செலவு திட்டம் தொடர்பான பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த அரசாங்கம், தற்போது இடைக்கால நிலையான கணக்கை பல மாதங்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆனால், ஜனாதிபதி டிசம்பர் 18ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வந்து விசேட உரை நிகழ்த்தினார். இந்த கதை, ஒரு பட்ஜெட் கதையின் சுருக்கம் போன்றது. ஜனாதிபதி ஏன் இவ்வாறு திடீர் உரை நிகழ்த்தினார் என்பதே எமக்கு உள்ள பிரச்சினை.

“அந்த உரையில், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி பேசினார். வரிகளை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகள், வரிகள் அதிகரிக்கப்படும் பகுதிகள், எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அப்படியானால், எதிர்வரும் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பது அரசாங்கம் அல்ல என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆவணம் வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது” என்று, புபுது கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...