Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு என்ன நடக்கும்?

T

The Leader Desk

டிசம்பர் 20, 2024 • 4:51 PM

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு என்ன நடக்கும்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
  • “இந்த படகில், 25 சிறு குழந்தைகள், 30 பெண்கள் உட்பட 102 பேர் உள்ளனர்.
  • மியான்மரில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, இந்த அகதிகள் குழு 16 நாட்களுக்கு முன்பு 3 படகுகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
  • இருப்பினும், வழியில் 2 படகுகளில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றின் பணியாளர்களும் இந்த கப்பலில் ஏறியுள்ளனர்.
எழுத்து அளவு:

அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட மியான்மர் பிரஜைகளை, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பணியாற்றி வருவதாக, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

“இந்த படகில், 25 சிறு குழந்தைகள், 30 பெண்கள் உட்பட 102 பேர் உள்ளனர். இப்போது சுகாதார அதிகாரிகள் வந்து, அவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கைகளின் பின்னர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்” என்று, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

"இந்நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை"

இதேவேளை, இந்த அகதிகள் தொடர்பில் இந்த நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியான்மரில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, இந்த அகதிகள் குழு 16 நாட்களுக்கு முன்பு 3 படகுகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

இருப்பினும், வழியில் 2 படகுகளில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றின் பணியாளர்களும் இந்த கப்பலில் ஏறியுள்ளனர்.

பயணத்தின் போது, ​​நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் சுகவீனம் மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (19) முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்த இந்தக் குழுவை, அப்பகுதி மீனவர்கள் பார்த்ததையடுத்து பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 102 பேர் கொண்ட மியன்மார் அகதிகள் மற்றும் படகுகளின் பணியாளர்கள் 12 பேர், இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை திருகோணமலை அஷ்ரப் ஜெட்டிக்கு அழைத்து வரப்பட்டனர்.

சரியான உணவு மற்றும் பானங்கள் இல்லாததால், இந்த குழு பலவீனமான நிலையில் இருந்தது.

இதன்போது, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் சென்றிருந்தார்.

பின்னர், மியான்மார் அகதிகளின் உடல்நிலையை பரிசோதிக்க இலங்கை அதிகாரிகள் அந்த இடத்தில் நடமாடும் மருத்துவ முகாமை நிறுவினர்.

இதேவேளை, அகதிகள் மற்றும் கப்பலின் பணியாளர்கள் இன்று பிற்பகல் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட மியன்மார் அகதிகளுக்கு என்ன நடக்கும்? | Tamil Leader | We Lead the Nation