Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

காலியைத் தொடர்ந்து களுத்துறையிலும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

T

The Leader Desk

டிசம்பர் 20, 2024 • 4:42 PM

காலியைத் தொடர்ந்து களுத்துறையிலும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • மெலேகொட – வன்ஷாவல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய லொக்கா என்றழைக்கப்படும் பட்டபெந்திகே பெத்தும் என்பவரே உயிரிழந்துள்ளார்.
  • ஹோட்டலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் வெளியாட்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹோட்டலின் அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மெலேகொட – வன்ஷாவல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய லொக்கா என்றழைக்கப்படும் பட்டபெந்திகே பெத்தும் என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி காயமடைந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, களுத்துறையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் வெளியாட்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹோட்டலின் அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விடுதிக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இளைஞர்கள் குழுவொன்று மதுபானம் அருந்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தை கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் உயர்மட்ட நிர்வாக அதிகாரி ஒருவர், தனது பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால், வானத்தை நோக்கிச் சுட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...