Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

“அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம் முன் உள்ளது”

T

The Leader Desk

டிசம்பர் 20, 2024 • 12:10 PM

“அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம் முன் உள்ளது”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
  • நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (20) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்/ இராஜதந்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அரச முகவர் முதல் மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய இந்த சேவை, சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்றும் நமது நாட்டை புதிய திசையில் கொண்டுசெல்வதில் பெரும் பங்கு உள்ளது என்றும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீள் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய குழு, அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும், உரிய தீர்மானங்களை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (20) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்/ இராஜதந்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச முகவர் முதல் மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய இந்த சேவை, சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்றும் நமது நாட்டை புதிய திசையில் கொண்டுசெல்வதில் பெரும் பங்கு உள்ளது என்றும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இறுதி இலக்கு மற்றும் நோக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றின் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், ஒரு அரசு என்ற வகையில், முழு அமைப்பும் சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு சீர்குலைந்துள்ள அமைப்பை மீள உருவாக்குவதற்கு நாம் தயாரா இல்லையா என்பதை எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...