Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

'காங்கேசன்துறையை வணிகத் துறைமுகமாக்க முடியாது!'

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2025 • 3:35 AM

'காங்கேசன்துறையை வணிகத் துறைமுகமாக்க முடியாது!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போதாது என நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
  • இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார்.
  • மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைமுக அபிவிருத்தி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
எழுத்து அளவு:

போதாது என நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைமுக அபிவிருத்தி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

குறித்த கலந்துரையாடலில் காங்கேசன் துறைமுகத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுபிகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிடம் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர், "யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை மூலமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறைமுகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார்.

பதில் வழங்கிய அமைச்சர், இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார் நாங்களும் பேசியுள்ளோம் ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார்.

இதன்போது கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என கூற முடியும் என்றார். பதில் வழங்கிய அமைச்சர், ஆய்வறிக்கை இருக்கிறது. நாடாளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கினார்.

யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள். ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்ட வீடு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

பதில் வழங்கிய அமைச்சர் மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக கைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது. பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'காங்கேசன்துறையை வணிகத் துறைமுகமாக்க முடியாது!' | Tamil Leader | We Lead the Nation