தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (19) சந்தித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, குடும்ப விடயங்கள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் சில பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக உள்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மேலாக நேரம் செலவிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, அவருடன் மதிய உணவையும் உட்கொண்டுள்ளார். அதன் பின்னரே, கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.


