Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

20/20 இறுதிப் போட்டியில் வென்றது ஆப்கான்: தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2024 • 6:35 AM

20/20 இறுதிப் போட்டியில் வென்றது ஆப்கான்: தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
  • என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பவர்பிளே நிறைவில் ஓவர் விக்கெட்டினை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி சார்பாக 13 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்திருந்த குஷால் மெண்டிஸ், பரீத் அஹ்மடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
  • இதனை தொடந்துவந்த குஷால் பெரேரா எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி 6.2 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
  • தொடந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பெத்தும் நிசங்க காயம் காரணமாக வெளியேற அணித் தலைவர் வனிந்து ஹசர்ங்க 13 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
எழுத்து அளவு:

தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

210 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பவர்பிளே நிறைவில் ஓவர் விக்கெட்டினை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி சார்பாக 13 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்திருந்த குஷால் மெண்டிஸ், பரீத் அஹ்மடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனை தொடந்துவந்த குஷால் பெரேரா எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி 6.2 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க அரைசதம் கடந்தார்.

தொடந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பெத்தும் நிசங்க காயம் காரணமாக வெளியேற அணித் தலைவர் வனிந்து ஹசர்ங்க 13 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்து 23 ஓட்டங்களோடு சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்க இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடந்து ஏஞ்சலோ மேத்யூஸ் 4 ஓட்டங்களோடு மொஹமட் நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின்னர் 2 ஓவர்களில் 36 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது.

இதில் சானக 13 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியால் 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...