Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து இந்திய அரசு ஒப்புதல்!

T

The Leader Desk

மே 8, 2021 • 4:41 PM

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து இந்திய அரசு ஒப்புதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த மருந்தில் உள்ள 2-DG மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த மருந்து செலுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது, அவர்களில் அதிகமான விகிதத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாக இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதில் உள்ள தகவல்கள் பின்வருமாறு: கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை நிகழ்ந்த ஏப்ரல் 2020 காலகட்டத்தில் INMAS-DRDO ஆய்வகத்தின்அறிவியலாளர்கள், ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி உடன் இணைந்து ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
  • பட மூலாதாரம்,PIB INDIA அப்போது கோவிட்-19 தொற்றை உண்டாக்கும் SARS-CoV-2 வைரசுக்கு எதிராக 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மூலக்கூறு திறம்பட செயல்படுவது கண்டறியப்பட்டது.
எழுத்து அளவு:

2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த மருந்தில் உள்ள 2-DG மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்து செலுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது, அவர்களில் அதிகமான விகிதத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாக இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான செய்திக் குறிப்பொன்றை இந்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பின்வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை நிகழ்ந்த ஏப்ரல் 2020 காலகட்டத்தில் INMAS-DRDO ஆய்வகத்தின்அறிவியலாளர்கள், ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி உடன் இணைந்து ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

DCGI approves anti-COVID drug developed by DRDO for emergency use

பட மூலாதாரம்,PIB INDIA

அப்போது கோவிட்-19 தொற்றை உண்டாக்கும் SARS-CoV-2 வைரசுக்கு எதிராக 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மூலக்கூறு திறம்பட செயல்படுவது கண்டறியப்பட்டது.

இந்த முடிவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள மே 2020 இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்தினர் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள 11 மருத்துவமனைகளில் இந்த இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 110 தொற்றாளர்கள் பங்கெடுத்தனர்.

இதிலும் நல்ல முடிவுகள் கிடைத்த பின்பு நவம்பர் மாதம் 2020 இல் மூன்றாம் கட்ட ஆய்வுகளுக்கு டிசிஜிஐ அலுவலகம் ஒப்புதல் அளித்தது.

டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 27 கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 220 தொற்றாளர்களுக்கு செலுத்தப்பட்டு மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மூன்றாம் கட்ட ஆய்வில் விரிவான தரவுகள் டிசிஜிஐ-யிடம் முன்வைக்கப்பட்டன.

வழக்கமாக பின்பற்றப்படும் சிகிச்சை முறைகளில், மூன்றாவது நாளில் அறிகுறிகள் தென்படுதல் மற்றும் செயற்கை ஆக்சிஜன் தேவை ஆகியவை ஒட்டுமொத்த நோயாளிகளில் 31 சதவீதம் பேரிடம் மட்டுமே குறைந்தது.

ஆனால் இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இந்த விகிதம், அதே மூன்றாம் நாளில் 42 சதவிகிதமாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கும் அதிகமான வயதுடைய நோயாளிகளிடமும் இதையொத்த போக்கே காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மிதமானது முதல் தீவிரமானது வரையிலான கோவிட்-19 பாதித்த நோயாளிகளின் அவசரகால பயன்பாட்டுக்காக இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று மே 1ஆம் தேதி டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

காப்புரிமை இல்லாத மூலக்கூறு என்பதாலும், குளுகோசை ஒத்த அமைப்புடைய மூலக்கூறு என்பதாலும் இந்த மருந்தை இந்தியாவில் எளிதாகவும் அதிகமான அளவிலும் தயாரிக்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனா சிகிச்சைக்கு டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்து இந்திய அரசு ஒப்புதல்! | Tamil Leader | We Lead the Nation