Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி 1994 – 1996ஆம் ஆண்டுக்குரியது’

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2024 • 1:40 PM

‘கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி 1994 – 1996ஆம் ஆண்டுக்குரியது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடையவை எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டன.
  • இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் தொடர்பிலும், மேலும் எந்தளவு பிரதேசத் தில் எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பது பற்றியும், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எத்தனையாம் ஆண்டுக்குரியவை என்பது குறித்தும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
  • இதேநேரம் இந்தப் புதைகுழி அகழ்வுக்காக 60 இலட்சம் ரூபாவும், உடல்கள் ஆய்வுக்கு 60 இலட்சம் ரூபாவும் தேவை எனக் கோரப்பட்டபோதும் அந்த நிதிக்கான அனுமதி இதுவரை கிடைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

1994ஆம் ஆண்டுக்கும் 1996ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினுடையவை எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் தொடர்பிலும், மேலும் எந்தளவு பிரதேசத் தில் எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பது பற்றியும், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எத்தனையாம் ஆண்டுக்குரியவை என்பது குறித்தும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த அறிக்கையில், மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் அனைத்தும் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டுள்ளன என்றும், இவை எந்தவொரு மதச் சடங்கு முறைகளையும் பின்பற்றி அடக்கம் செய்யப்படவில்லை என்றும், இந்த உடல்கள் காணப்படும் இடத்தில் மேலும் 2 மீற்றர் தூரத்துக்கு நிலத்துக்கு கீழே இரு அடுக்குகளில் உடல்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் ஆண்கள், பெண்களின் உடல் பாகங்கள் காணப்படுகின்றன என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையிட்டுள்ளார் என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்தார்.

இதேநேரம் இந்தப் புதைகுழி அகழ்வுக்காக 60 இலட்சம் ரூபாவும், உடல்கள் ஆய்வுக்கு 60 இலட்சம் ரூபாவும் தேவை எனக் கோரப்பட்டபோதும் அந்த நிதிக்கான அனுமதி இதுவரை கிடைக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-மாலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...