கிலோகிராமின் மொத்த விலை 1000 ரூபாயைத் தாண்டி நேற்று (18) விற்பனை செய்யப்பட்டதாக தம்புளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் ஆலோசகர் யூ.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கரட், லீக்ஸ் உள்ளிட்ட மண்ணுக்குள் விளையும் மரக்கறிகளின் விநியோகம் சாதாரண மட்டத்தில் காணப்பட்ட போதிலும், பூக்களிலிருந்து விளையும் மரக்கறிகளின் விநியோகம் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தினசரி சுமார் 8 - 10 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் விநியோகிக்கப்படும் தம்புளை மொத்த விற்பனை சந்தைக்கு, நேற்று 3 - 4 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகளே கிடைத்துள்ளன. குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளிலிருந்து மரக்கறி விநியோகம் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதாக ஏக்கநாயக்க சுட்டிக்காட்டினார்.
இதன்படி, குடை மிளகாய் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1200 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1000 - 1100 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் பீன்ஸ் 450 - 500 ரூபாய் வரையிலும், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் மொத்த விலை 450 - 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
கரட் மற்றும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 220 ரூபாய்க்கும், கோவா ஒரு கிலோகிராம் 180 ரூபாய்க்கும், பூசணிக்காய் ஒரு கிலோகிராம் 80 - 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


