சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இதற்கான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, பொறுப்பு வாய்ந்த பதவியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரி என்ற வகையில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வருங்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 'அத தெரண' வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவியபோது, ஒழுக்காற்றுப் பரிசோதனைக்கு உட்பட்டு தனது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


