பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டලவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் உடுதும்பரை பகுதியில் 201 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகூடிய மழைவீழ்ச்சி உடுதும்பரை பொத்தபிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளதுடன், அது 155 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன. அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவாவெவ, ராஜாங்கனை, நாச்சாதுவ, அங்கமுவ ஆகிய குளங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.
கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும் வான்பாய்கின்றன. குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓய வான்பாய்வதுடன், அம்பாறை மாவட்டத்தில் சேனாநாயக்க சமுத்திரமும் வான்பாய்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கலாவாவி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா 6 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் தலா 5 அடி வீதமும், மேலும் 2 வான்கதவுகள் தலா 4 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
நாச்சதுவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் தலா 4 அடி வீதமும், மேலும் 3 வான்கதவுகள் தலா 2 அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன. அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக பதுளை, மாத்தளை, கிளிநொச்சி, கேகாலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வீதிகளில் சில இடங்கள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை சுங்காவில - சோமாவதி வீதி வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது


