வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பேசாலை, காத்தாஸ்பத்திரி, சிறுத்தோப்பு போன்ற கடற்கரைப் பகுதிகளில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்துகள் இவ்வாறு கரை ஒதுங்கி வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக்காற்றின் (ஈசாணியப் பருவக்காற்று) திசைமாற்றம் காரணமாகவே இந்தக் காலப்பகுதியில் கடலலைகளுடன் சிறிய பவளக் கற்களின் அளவிலான பிளாஸ்டிக் பந்துகள் கரைக்கு அடித்து வரப்படுவதை காண முடிவதாக பிரதேச மீனவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்தியாவின் கேரளப் பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் கொள்கலன் பெட்டிகளுடன் விபத்துக்குள்ளான MSC ELSA 3 என்ற கப்பலின் கொள்கலன் பெட்டிகளில் இருந்த பிளாஸ்டிக் பந்துகளே, தற்போது நிலவும் வடகிழக்கு பருவக்காற்று காலநிலையுடன் கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.


