Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்வு!

T

The Leader Desk

நவம்பர் 20, 2025 • 4:01 AM

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் ரத்நாயக்கவினால் அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • அதன்படி, வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஒரு மாத காலப்பகுதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இதுவரை அறவிடப்பட்ட ரூபா 2,000/- இன்று முதல் ரூபா 15,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று, இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது அதற்குச் சமமான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்ட இலங்கை பிரஜை ஒருவருக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக இதுவரை அறவிடப்பட்ட ரூபா 3,300/- இன்று முதல் ரூபா 30,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் ரத்நாயக்கவினால் அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஒரு மாத காலப்பகுதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இதுவரை அறவிடப்பட்ட ரூபா 2,000/- இன்று முதல் ரூபா 15,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலும் இரண்டு மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு: ரூபா 21,000/-

இரண்டு மாதங்களுக்கு மேலும் 6 மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு: ரூபா 30,000/-

6 மாதங்களுக்கு மேலும் 12 மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு: ரூபா 45,000/-

மேலும், வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் ரூபா 15,000/- ஆகும். சாரதி அனுமதிப்பத்திரம் அழிந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் பிரதியொன்றை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணமும் ரூபா 15,000/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது அதற்குச் சமமான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்ட இலங்கை பிரஜை ஒருவருக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக இதுவரை அறவிடப்பட்ட ரூபா 3,300/- இன்று முதல் ரூபா 30,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது அதற்குச் சமமான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு இதுவரை அறவிடப்பட்ட ரூபா 15,000/- இன்று முதல் ரூபா 60,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...