Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

துனித்தின் தந்தை மறைவு: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2025 • 4:31 AM

துனித்தின் தந்தை மறைவு: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முழுவதும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நேற்றைய (18) போட்டியில் அதிரடியாக துடுப்பாடிய மொஹமட் நபியும் அவர்களில் அடங்கியுள்ளார்.
  • அத்துடன் பங்களாதேஷ் அணியின் டி-20 தலைவர் லிட்டன் தாஸூம் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை இட்டு, துனித்தின் குடும்பத்திற்கு பலம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
  • "துனித் வெல்லாலகே, தைரியமாக இருங்கள்.
எழுத்து அளவு:

முழுவதும் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நேற்றைய (18) போட்டியில் அதிரடியாக துடுப்பாடிய மொஹமட் நபியும் அவர்களில் அடங்கியுள்ளார்.

துனித்தும் அவரது தந்தையும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது 'எக்ஸ்' கணக்கில் பதிவிட்டு, துனித்தின் குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

"அன்பான தந்தையின் மறைவுக்கு துனித் வெல்லாலகே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள் சகோதரரே," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பங்களாதேஷ் அணியின் டி-20 தலைவர் லிட்டன் தாஸூம் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை இட்டு, துனித்தின் குடும்பத்திற்கு பலம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

"துனித் வெல்லாலகே, தைரியமாக இருங்கள்.

உங்கள் தந்தை சுரங்க வெல்லாலகே 54 வயதில் காலமானார் என்பதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர்.

கடவுள் அவருக்கு நித்திய அமைதியையும், இந்த கடினமான நேரத்தில் துனித்தின் குடும்பத்திற்கு பலத்தையும் வழங்குவாராக" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, பங்களாதேஷ் வீரர்களான தஸ்கின் அஹமட், தவ்ஹித் ரிதோய் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் துனித் விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

nabi_.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...