Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றுப் பரவல் தீவிரம்: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை!

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2025 • 4:26 AM

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றுப் பரவல் தீவிரம்: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதங்களேயான குழந்தை மூளையை உண்ணும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம் இம்மாதம் தொடக்கத்தில் நிகழ்ந்தது.
  • அதில் இம்மாதம் மட்டும் 24 பேருக்கு புதிதாக அமீபா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதில் இம்மாதம் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
  • சுமார் 20 நாட்களுக்குள்ளாகவே 24 பேர் தொற்று பாதித்து கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதும், 9 பேர் மரணமடைந்துள்ளதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்து அளவு:


கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதங்களேயான குழந்தை மூளையை உண்ணும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம் இம்மாதம் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இம்மாதம் அமீபா தொற்றின் தாக்கம் அதிகமாக பதிவாகி உள்ளது.

மூளையை உண்ணும் அமீபா தொற்று பாதித்த 71 பேர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதில் இம்மாதம் மட்டும் 24 பேருக்கு புதிதாக அமீபா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையை உண்ணும் அமீபா பரவலால் இந்த ஆண்டு மொத்தம் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில் இம்மாதம் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 20 நாட்களுக்குள்ளாகவே 24 பேர் தொற்று பாதித்து கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதும், 9 பேர் மரணமடைந்துள்ளதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கால்நடைகளை குளிப்பாட்டும் குளங்களிலும், பாசிகள், மாசு கலந்த தண்ணீர் நிறைந்த குளங்களிலும் இவ்வகை அமீபாக்கள் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. இப்போது வீடுகளுக்கு அருகே உள்ள கிணறுகளிலும் இவ்வகை அமீபா கண்டறியப்பட்டுள்ளது.

குளங்களிலும், கிணறுகளிலும் குளோரினேசன் செய்வதன் மூலம் இவ்வகை அமீபா பரவலை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, வலிப்பு போன்றவை இந்நோய் தொற்றியுள்ளதற்கான அறிகுறிகளாகும்.

இந்த அமீபா தொற்று பரவி குறித்த கேள்விக்கு சட்டமன்ற கூட்டத்தில் கேரள சுஜாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், "அமீபிக் மூளைக்காய்ச்சல் அரிதான நோய் ஆகும். அனைத்து நீர்நிலைகளிலும் அமீபாக்கள் உள்ளன. 2016-ம் ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் ரிப்போர்ட் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒன்று, இரண்டு தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் மூளைக்காய்ச்சல் மரணங்கள் நிறைய நடக்கின்றன. உலக அளவில் 45 முதல் 50 சதவிகிதம் மூளை காய்ச்சல் மரணங்கள் கண்டறியப்படுகின்றன. இந்தியாவில் 25 முதல் 30 சதவிகிதம் மூளைக்காய்ச்சல் மரணங்கள் மட்டுமே கண்டறியப்படுகின்றன. 70 சதவிகிதம் மூளைக்காய்ச்சல் மரணங்கள் எதனால் நடந்தன என்பது கண்டறியப்படாமலே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றுப் பரவல் தீவிரம்: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை! | Tamil Leader | We Lead the Nation