சர்வதேச வழக்குகள் மூலம் மட்டுமே இலங்கையால் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற முடியுமென்று சர்வதேச சட்டவல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெனீவா பத்திரிகையாளர் மன்றத்தில் தேசிய கனேடியத் தமிழர் மன்றம் உயர்மட்டக் குழு விவாதமொன்றை நடத்தியுள்ளது. இதில் சர்வதேச சட்ட வல்லுநர்களும் தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். அதன்போதே அவர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘இலங்கையில் சர்வதேச பொறுப் புணர்வை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் (10 ஆம் திகதி) நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வெர்னர், சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி மிரியம் பெளஸ்டி, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரி ஜூலி டூபேகாக்னான் மற்றும் தமிழ் சிவில் சமூக மன்றத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச குற்றங்களுக்கான பாதிக்கப்பட் டவர்களின் தரப்பில் பங்கேற்பதில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வெர்னர் கூறியுள்ளதாவது,
‘‘தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் நீதியைத் தேடுவதில் விடாமுயற்சி மிக முக்கியமானதாகும்.
பொறுப்புக்கூறல் திட்டத்தின் மூலம் சாட்சியங்களைப் பாதுகாப்பதில் ஐ.நாவின் முயற்சிகளை இலங்கை ஒப்புக்கொண்டாலும் சுயாதீனமான சர்வதேச வழக்குகள் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் கிடைக்கும். உள்ளக நீதிப் பொறிமுறை சாத்தியமில்லாதபோது வெளிநாட்டு தேசிய நீதிமன்றங்களில் சர்வதேச குற்றங்களைத் தொடர்வதை உள்ளடக்கிய புறம்போக்கு அல்லது உலகளாவிய அதிகார வரம்பு அவசியமாகும்.
ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களுடன் முழுமையான வழக்கு கோப்புகளைத் தயாரிப்பது தமிழ்ச் சமூகத்துக்கு மிக அவசியமான விடயமாகும். வரம்புகளின் அடிப்படையில் குற்றங்கள் காலாவதியாகாது. தமிழ் மக்கள் பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அதிகார வரம்புகள் மூலம் நீதியைத் தொடரவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழன்


