தானும் விஷம் அருந்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் ஆவார்.
இவரது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதுடன், 34 வயதான அவர் லுகேமியா (இரத்தப் புற்றுநோய்) காரணமாக உயிரிழந்துள்ளார்.
12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், அப்பிள்ளைகள் உடுதும்பர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த பெண் மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


