Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பெப். 19இல் தமிழரசின் மாநாடு: பங்கீட்டு முறையில் பொதுச் செயலாளர் பதவி

T

The Leader Desk

பிப்ரவரி 12, 2024 • 11:31 AM

பெப். 19இல் தமிழரசின் மாநாடு: பங்கீட்டு முறையில் பொதுச் செயலாளர் பதவி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
  • தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்குத் தீர்வு கிட்டியது எனவும், தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியைப் பங்கிட இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் எனவும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
  • இதற்கமைய தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
எழுத்து அளவு:

திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.

அதன்போது, இறுதியாக திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பதவி சர்ச்சைக்குத் தீர்வு கிட்டியது எனவும், தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியைப் பங்கிட இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் எனவும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் உட்பட நிர்வாகத் தெரிவு மத்திய குழுவில் இறுதி செய்யப்பட்டு பொதுச் சபையில் விடப்பட்ட வேளை பொதுச்செயலாளர் பதவியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பின் பின்னர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்குத் தீர்வு எட்டும் வகையில் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வவுனியாவில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.

நீண்ட நேரம் இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசன் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனுக்குத் தலா ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியை வழங்கவும், அதன்படி முதலாவது வருடத்தை குகதாசனுக்கு வழங்குவது எனவும், இரண்டாவது வருடத்தை ஸ்ரீநேசனுக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 19 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

நன்றி: மாலைமுரசு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...