Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நேற்றைய தினம் 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

T

The Leader Desk

ஜூன் 2, 2021 • 9:41 AM

நேற்றைய தினம் 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்டார் ஏயர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் ஆறு இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனங்களினால் இயக்கப்படும் விமானங்களினூடாக இவர்கள் நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியதன் மூலம், நேற்று மொத்தம் 567 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர்.
  • அதே நேரத்தில் வியட்நாம் மற்றும் இந்தியாவிலிருந்து பயணிகளின் வருகைக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.
  • சுமார் 10 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை மீண்டும் உள்நாட்டிற்கான சர்வதேச பயணங்களைத் தொடங்க விமான நிலையங்களை மீண்டும் திறந்தது.
எழுத்து அளவு:

கட்டார் ஏயர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் ஆறு இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனங்களினால் இயக்கப்படும் விமானங்களினூடாக இவர்கள் நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

"நாடு முழுவதும் விரைவான தடுப்பூசி திட்டத்தின் விளைவாக இந்த எண்ணிக்கை ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியதன் மூலம், நேற்று மொத்தம் 567 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர்.

அதே நேரத்தில் வியட்நாம் மற்றும் இந்தியாவிலிருந்து பயணிகளின் வருகைக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சுமார் 10 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை மீண்டும் உள்நாட்டிற்கான சர்வதேச பயணங்களைத் தொடங்க விமான நிலையங்களை மீண்டும் திறந்தது.

அப்போதிருந்து மே 20 வரை சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க 13,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...