ஏறக்குறைய ஒன்பது மாதங்களாக வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களால் இலங்கைக்கு வர முடியவில்லை பல்வேறு நாடுகளில் வேலை இழந்த சூழ்நிலையில் இலங்கையர்கள் தாய் நாட்டிற்கு வரமுடியாமலும் அங்கு இருக்க முடியாமலும் தவிக்கின்ற வேலையில் பல விமானங்களில் உக்ரேனிய நாட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் தற்போதைய கோதபாய ராஜபக்ஷ அரசாங்கத்தை இலங்கயைச் சேர்ந்த வௌிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்ப்பதாக srilankabrief.org தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியையும் தற்போதைய அரசாங்கத்தையும் எதிர்த்து அவர்கள் சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

முன்னர் நாட்டிற்கு டொலர்களைக் கொண்டுவரும் நாட்டின் மாவீரர்கள் என்று அழைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்தவர்கள் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவொரு தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையையும் பின்பற்றாமல் அழைத்து வரும் அதேவேலை  தங்களைப் பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என வௌிநாட்டில் வேலை செய்யும் இலங்கை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருவதற்காக சில பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக இப்போது தங்களது உடல்களை விற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கே, ஒரு பெண் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், "மிஸ்டர் ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 9 மாதங்கள் தேசத்திற்கு மூடப்பட்டிருந்த விமான நிலையத்தை நீங்கள் திறக்கவில்லை, ஆனால் வெளிநாட்டினருக்கு நாட்டைத் திறந்து நடனமாடினீர்கள்" அவர் நாட்டை வெளிநாட்டினரிடம் விற்றுவிட்டார் .. இலங்கையர்களுக்கு நாட்டை மூடிவிட்டார்கள்.உங்களுக்கு வெட்கமாக இல்லையா! ஜனாதிபதி அவர்களே.. வெட்கமில்லாத வேலையைச் செய்யாதீர்கள் .. இவை பாவச் செயல்கள் .. ”

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப்  பணிப்பெண்கள், இலங்கைக்கு திரும்புவதற்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க விபச்சாரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கின்றனர்.

இதுபோன்ற பல வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன, அவற்றில் சில கீழே வெளியிடப்பட்டுள்ளன.

திரு ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நாடு வெளிநாட்டவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களுக்கு மூடப்பட்டுள்ளது.

 

திரு ஜனாதிபதி அவர்களே, கழிப்பறைகளை சுத்தம் செய்வதன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணத்தில் சாப்பிட வேண்டாம்!

ப(B)ங்காளியுடன் படுத்துவிட்டாவது இலங்கைக்கு வர பணம் சேர்க்கிறேன் நாங்கள் உங்களை சபிக்கிறோம் ..

உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் அழைத்து வரும் அரசாங்கம் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை..

வௌிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களை அழைத்து வருவதில் ஒரு பெரிய மாஃபியா நடக்கிறது - இராஜாங்க அமைச்சர் அருந்திக

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதிலிருந்து மாஃபியா தீவிரமாக செயற்பட்டு வருவதாக வெளியுறவு இராங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கூறுகிறார்.

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கை தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவது மிகவும் நியாயமற்ற வணிகமாக மாறியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

விமான நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஒரு பெரிய மாஃபியா இருப்பதையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை இப்போது ஒரு சுரண்டலாகவும், பணம் சம்பாதிக்கும் முயற்சியாகவும் மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் விளைவாக, இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பெரும் தியாகங்களைச் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு தெரியாமல் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(ஆதாரம் - srilankabrief.org)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி