தனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய சபையைக் கூட்டுமாறு கட்சியின் பல உப தலைவர்களுக்கு அவர் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான அகரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் தொலைபேசி ஊடாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னரே ஜீவன் தொண்டமான் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்கள் பதவி வகிக்கும் தலவாக்கலை-லிந்துலை, நுவரெலியா மாநகர சபை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்ளை அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவிலிருந்து விலகுவதற்கான கடிதங்களை வழங்குமாறு ஜீவன் தொண்டமான் கோரியுள்ளதாக அந்த சிரேஷ்ட உப தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் தேசிய சபையைக் கூட்டுமாறு தொலைபேசி மூலம் அறிவித்த போதிலும், அந்த கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தால் மட்டுமே தேசிய சபையைக் கூட்ட முடியும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் தெரிவித்துள்ளார்.
-அருண


