பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் மாத்திரம் 9 வீதிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊவா மாகாணத்தில் ஒரு வீதியும், வட மாகாணத்தில் 2 வீதிகளும், வடமேல் மாகாணத்தில் ஒரு வீதியுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சில வீதிகளில் பாலங்களை புனரமைக்க வேண்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும், தற்போது பல வீதிகளில் சேதமடைந்திருந்த பாலங்கள் சீர்செய்யப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


