மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றிய ஜனக் மகேந்திர அதிகாரி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 60வது வயதில் காலமானார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் பிரதி அமைச்சருமான எஸ்.சி. முத்துகுமாரனவும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை காலமானார். இவர் மறைந்த ஜனக் மகேந்திர அதிகாரியுடன் சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்ட ஒருவராவார்.
முத்துகுமாரன அவர்கள் தலாவ பிரதேச சபையின் உறுப்பினராகவும், வடமத்திய மாகாண சபையில் முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்கவின் காலத்தில் சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 2010 ஆம் ஆண்டு கலாவௌ தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். பின்னர் அவர் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.


