Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 18, 2025 • 5:17 AM

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது நிலவும் மழைப்பொழிவு மற்றும் வானிலை ஆய்வுத் துறையின் வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தற்போது நிலவும் மழைப்பொழிவு மற்றும் வானிலை ஆய்வுத் துறையின் வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பகங்கொரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் (Level 2) கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவாபரணகம, காலி மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை மற்றும் தொழுவ, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல, அரநாயக்க மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் (Level 1) கீழ் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ மற்றும் ரிதீகம, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, யட்டவத்த, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, மொனராகலை மாவட்டத்தின் மெதகம, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, வலப்பனை, இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இம்புல்பே, எஹலியகொட, வெளிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...