Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் கம்பனிகளை இழுத்து மூடவேண்டி ஏற்படும்!'

T

The Leader Desk

அக்டோபர் 18, 2025 • 4:53 AM

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் கம்பனிகளை இழுத்து மூடவேண்டி ஏற்படும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கம்பனிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்று, பெருந்தோட்டக் கம்பனிகளின் முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
  • அது மாத்திரமன்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தால், அதற்காகப் பெருந்தோட்டக் கம்பனிகள் 13 பில்லியன் ரூபாயைச் செலவிட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கடந்த 13ஆம் திகதியன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

கம்பனிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்று, பெருந்தோட்டக் கம்பனிகளின் முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமன்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தால், அதற்காகப் பெருந்தோட்டக் கம்பனிகள் 13 பில்லியன் ரூபாயைச் செலவிட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கடந்த 13ஆம் திகதியன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் பரிந்துரை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த சம்பள அதிகரிப்பு முறை தொடர்பில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

பெருந்தோட்டத் தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இங்கு ஜனாதிபதியிடம் விளக்கினர்.

தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனப் பிரதிநிதிகள், இந்தத் துறையின் முன்னேற்றம் தொடர்பான தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழில் ஆணையர் நாயகம் நதீகா வட்டலியத்த மற்றும் ஏனைய அதிகாரிகள், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் Agarapatana & Kotagala Plantation PLC, Kelani Valley Plantation PLC, Malwatte Valley Plantation PLC, Balangoda Plantation PLC, Browns Plantation PLC, Kahawatte Plantation PLC, Kegalle Plantation PLC, Agalawatta Plantation PLC ஆகிய தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...