போவதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தன்னிச்சையாக மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 04ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் மெதுவாக வேலை செய்யும் (work-to-rule) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தன.
அந்த தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, சுகயீன விடுமுறை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17) ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, அந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் இரண்டாவது நாளாக தொடர்வதாக மின்சார தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டன.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்தும் அலட்சியம் செய்தால், ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கோசல அபேசிங்க தெரிவித்தார்.


