leader eng

இணையத்தள ஊடகவியலாளரான முருகப்பிள்ளை கோகிலதாசன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் 14 நாட்களுக்கு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நவம்பர் 29 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கின்னயடி, வாளைச்சேனை, மட்டக்களப்பு என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதான கோகுலதாசன் கைது செய்யப்பட்டார்.

கார்த்திகை வீர்ர்கள் தினத்தை முன்னிட்டு தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்தமைக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

பொலிஸ் வட்டார தகவளின்படி, முருகப்பிள்ளை கோகுலதாசன் கருணா அம்மானின் கட்சி மற்றும் பிள்ளையான் ஆகியோரின் கட்சியின் முன்னாள் ஆதரவாளர் ஆவார்.

(ஆதாரம் - அனித்தா)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி