அனர்த்தத்துடன் உலகம் முழுவதுமே பேசப்பட்ட ஒரு அழகான கிராமமாகும்.
தேயிலை பயிர்ச்செய்கையை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட மஸ்பன்ன கிராமவாசிகள், மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் மற்றும் விருந்தோம்பலில் சிறந்த பண்புகளைக் கொண்ட கிராமத்து மக்களாவர்.
மஸ்பன்ன நகரம் ஒரு சிறிய கடைத் தொகுதி மற்றும் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சிறிய பேருந்து நிலையத்தைக் கொண்ட அழகிய நகரமாகும். மஸ்பன்னவின் காலநிலை மற்றும் அதன் எழில்மிகு தோற்றம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவருவதில் வியக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்தது.
அன்றாட விவசாயத்தின் மூலம் தமது வாழ்க்கையை முன்னெடுக்கும் மஸ்பன்ன கிராமவாசிகளுக்கு இடையே இருந்த பரஸ்பர பிணைப்பு, கடந்த 26ஆம் திகதிக்கு பின்னரே பலரது கவனத்தை ஈர்த்தது.
மஸ்பன்ன நகரின் பேருந்து நிலையத்திற்கு மேலே இருந்த பாரிய மண்மலையின் ஒரு பகுதி, கடந்த 26ஆம் திகதி பகல் வேளையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில பேருந்துகள் மீது சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பேருந்து நிலையத்திலோ அல்லது பேருந்துகளிலோ எவரும் இருக்கவில்லை. பல நாட்களாக பெய்து வந்த கடும் மழை காரணமாக மஸ்பன்ன கிராமவாசிகள் தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருந்தனர்.

அன்றைய தினம், அதாவது 26ஆம் திகதி இரவு, மஸ்பன்ன கிராமவாசிகளின் விதியைத் தீர்மானிக்கும் இரவாக அமைந்தது.
பெய்த கனமழையுடன் கிராமத்திற்கு மேலே இருந்த மண்மலை மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருந்தது, ஆனால் அது பற்றி எவரும் அவதானம் செலுத்தவில்லை. சிறிது நேரத்தின் பின்னர், ஒரு மாபெரும் மண்மலை சரிந்து முழு மஸ்பன்ன கிராமத்தையும் மூடிக்கொண்டது. கிராமம் இருந்த இடம் கூடத் தெரியாத அளவிற்கு அது அழிந்து போனது. அன்றிலிருந்து மஸ்பன்ன நகரம் இலங்கை வரைபடத்திலிருந்து மறைந்து போயிருந்தது.
பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச அதிகாரிகளின் உழைப்பின் மூலம் தற்போது மஸ்பன்ன கிராமம் மீண்டும் வெளிப்பட்டு வருகின்றது. நேற்று நிலவரப்படி, மண்ணுக்குள் புதையுண்டிருந்த பேருந்து நிலையத்தின் பேருந்துகள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவு பெரிய அழிவுக்குள்ளான மஸ்பன்ன கிராமம் மிக விரைவில் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்பதே அந்த கிராமவாசிகளின் ஏகோபித்த பிரார்த்தனையாகும்.



