அனுமதி கோரியதாக கடந்த 12ஆம் திகதி செய்தி வெளியானது.
இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, அசித பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜெப்ரி வான்டர்சே மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் அதிகாலை 3 மணிக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து புறப்படுவதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமை ஏற்பட்டவுடன் தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, விஷேன் ஹலம்பகே, கருக்க சங்கெத் போன்ற வீரர்களை அணியில் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் இலங்கை அணியுடன் அங்கு சென்றுள்ள அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னர், இறுதியாக வீரர்கள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வீரர்களின் முடிவுகளுக்கு மூன்றாம் தரப்பு அழுத்தம் கொடுத்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகை அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
தற்போது, எதிர்வரும் இலங்கை-பாகிஸ்தான்-ஜிம்பாப்வே முத்தரப்புத் தொடரில் பங்கேற்பதற்காக 20 ஓவர் அணிக்கு பெயரிடப்பட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்துள்ள நிலையில், சரித் அசலங்க உட்பட வீரர்களும் முத்தரப்புத் தொடரில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.


