Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வடக்கு, கிழக்கில் கனமழை; இன்னும் 2 நாள்கள் நீடிக்கும்!

T

The Leader Desk

நவம்பர் 17, 2025 • 4:35 AM

வடக்கு, கிழக்கில் கனமழை; இன்னும் 2 நாள்கள் நீடிக்கும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 'மட்டக்களப்பில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 48 மணிநேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 36 மணி நேரத்தில் 125 மி.
  • எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அந்தக் கால பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கனமழையைப் பெறும்.
  • இம்முறை மழையின் போக்கில் மிகப்பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது.
எழுத்து அளவு:

பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்,

'மட்டக்களப்பில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 48 மணிநேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஒரு மணி வரையான 36 மணி நேரத்தில் 125 மி. மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகின.

தொடர்ந்து இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நகர பிரதேசங்களை அண்மித்த - தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அந்தக் கால பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கனமழையைப் பெறும்.

இம்முறை மழையின் போக்கில் மிகப்பெரியளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது. குறிப்பாக அதிகளவிலான மழையைப் பெறுகின்ற வவுனியா மற்றும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் மன்னர் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மழையைப் பெற்றிருக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நுண் காலநிலை வேறுபாடுகளை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்' என்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...