மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்கும் பிரதான உந்துவிசை நீரேற்று நிலையத்திற்கான மின்சாரம் தடைப்படுவதால், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை குறிப்பிடுகின்றது.
அதன்படி, காலை 10.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
மேலும், பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒறுகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவள, ரத்மலான, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


