Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க 02 மாதங்கள் அவகாசம் கோரும் சந்திரிகா!

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2025 • 3:45 AM

உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க 02 மாதங்கள் அவகாசம் கோரும் சந்திரிகா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்ட நிறுவனம் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்றும், சிலர் உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறிய போதிலும், இன்னும் பொருட்களை ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
  • அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
  • அவர் தங்கியிருந்த விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் மதிப்பிடப்பட்ட வாடகை 46 இலட்சம் ரூபாய் என்று நீங்கள் கடந்த பெப்ரவரி மாதம் கூறினீர்கள்.
  • அமைச்சர்; இந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்த சிலர் 1994இல் அமைச்சராகி அன்று முதல் அரசாங்க இல்லத்தில் தங்கியிருக்கிறார்கள்.
எழுத்து அளவு:

சட்ட நிறுவனம் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்றும், சிலர் உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறிய போதிலும், இன்னும் பொருட்களை ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஊடகவியலாளர்; முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு என்ன நடக்கிறது? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு குடியேறினார். அவர் தங்கியிருந்த விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் மதிப்பிடப்பட்ட வாடகை 46 இலட்சம் ரூபாய் என்று நீங்கள் கடந்த பெப்ரவரி மாதம் கூறினீர்கள். அந்தப் பணத்தை அரசாங்கத்தால் ஈட்ட முடியுமா?

அமைச்சர்; இந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்த சிலர் 1994இல் அமைச்சராகி அன்று முதல் அரசாங்க இல்லத்தில் தங்கியிருக்கிறார்கள். அதன்பிறகு பிரதமராக அரசாங்க இல்லத்தில் இருந்திருக்கிறார்கள். மீண்டும் சிறிது காலம் எதிர்க்கட்சித் தலைவராக அரசாங்க இல்லத்தில் இருந்திருக்கிறார்கள். ஜனாதிபதியாக அரசாங்க இல்லத்தில் இருந்திருக்கிறார்கள்.

10 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்து, முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்க இல்லத்தில் இருக்கிறார்கள். ஆக, 31 ஆண்டுகளாக அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களில் இவ்வாறு தங்கியிருக்கிறார்கள். இந்த வீடுகளில் இருந்து வெளியேற முடியாது என்று சொல்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் அனைவருக்கும் அரசாங்க வீடுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் கூட இந்த வீடுகளில்தான் பிறந்திருக்கிறார்கள். இது ஒரு பழக்கமாகிவிட்டது. இந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காகவே மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். பொதுவான சட்டத்தின்படி, தற்போதைய ஜனாதிபதிக்கும் அந்த விடயங்கள் இல்லாமல் போகும்.

ஊடகவியலாளர்; இந்த வீடுகள் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது? ஏதேனும் திட்டம் உள்ளதா?

அமைச்சர்; இந்த உத்தியோகபூர்வ இல்லங்களை பொருளாதார ரீதியாக பயனுள்ள நடவடிக்கைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே பெரிய தொகையை செலுத்தும் அரச நிறுவனங்கள் இந்த சொத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தருமாறு கோரியுள்ளன. நாங்கள் அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. திறைசேரிக்கு நன்மை பயக்கும் ஒரு முடிவை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...