Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கழுத்தறுத்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி; திடுக்கிடும் உண்மை வெளியானது

T

The Leader Desk

மார்ச் 10, 2024 • 1:45 PM

கழுத்தறுத்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி; திடுக்கிடும் உண்மை வெளியானது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையில், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
  • தல்கஹவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • பின்னர், சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எழுத்து அளவு:

நிலையில், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தல்கஹவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளதாகவும், தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது,

சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிறுமியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாணயக்கார மாவத்தைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் குறித்த சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...