ஜயவர்தனபுர கோட்டை, பொல்துவ பாலத்திற்கருகில், கடந்த 11ம் திகதி அதிகாலையில் அனுமதியின்றி மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரின் படகு மீது பாதுகாப்புப் பிரிவினரின் படகு மோதியதில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். மற்றவர் நீந்தி உயிர் பிழைத்துள்ளார். இறந்த நபருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகக் கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

தியவன்னாவ வாவியில் இராணுவத் தளபதியின் உத்தியோக இல்லத்திற்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ரவீந்திரன் என்ற 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமைக்கு எதிராக இன்று (13) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

நீரில் மூழ்கி இறந்தவரின் சடலம் நேற்று (12) ரஜமல்வத்தை பிரதேசத்தில் தியவன்னாவ வாவிக் கரையில் மிதந்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இறந்தவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகக் கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

தியவன்னா வாவியில் அனுமதியின்றி மீன் பிடிப்பதாகக் கிடைத்த தகவலொன்றிற்கமைய அங்கு சென்ற பாதுகாப்புப் அதிகாரிகளின்; படகு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனுமதி பெறாத படகில் மோதியமையால் அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் வாவிக்குள் விழுந்துள்ளனர். அதில் ஒருவர் நீரில் மூழ்கி 11ம் திகதி அதிகாலை 01.00 மணியளவில் காணாமல் போயுள்ளார். நீந்தி உயிர் பிழைத்த 29 வயதுடைய அடுத்த நபர் இராணுவத் தளபதியின் இல்லத்தில் பாதுகாப்பிலிருந்த அதிகாரிகளினால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிலகாலமாக தியவன்னா வாவியில் மீன் பிடிப்பதை வழமையாக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக பொல்துவ பாலத்திற்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு வலையை அகற்றி பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து மீன் பிடிப்பதற்காக வலை வீசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் தாம் மீன் பிடித்துக் கொண்டிருப்பது இராணுவத் தளபதியின் வீட்டிற்கு பின்புறம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவித்த போதிலும் அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே படகொன்றில் வேகமாக பாதுகாப்பு அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். கடும் இருட்டு காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்த படகு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகில் மோதி விபத்து நடந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி