சமூகத்தில் சுமார் 14,500 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (21) கொழும்பு வடக்கு பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது:
"சமீபத்தில் இலங்கையில் எத்தனை குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர் என்று ஒரு ஆய்வு நடத்தினோம். ஆரம்பத்தில், சுமார் 7,500 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் இருப்பது தெரியவந்தது. நாங்கள் நடத்திய அடுத்த ஆய்வில், சமூகத்தில் சுமார் 14,500 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
“ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாகும். பொலிஸாக, ஆபத்தான நிலைமையில் உள்ள குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கி, அவர்கள் பாதிக்கப்படாமல் வைத்திருக்க ஒரு நடவடிக்கை எடுத்தோம். குழந்தைகள் தான் எதிர்காலம். அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு” என்று அவர் மேலும் கூறினார்.