Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி உறுதி; ட்ரம் அறிவிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 16, 2025 • 4:33 AM

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி உறுதி; ட்ரம் அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
  • ரஷியாவும் இராணுவ வீரர்கள் உள்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது.
  • அது 3,000 ஆண்டுகள் பிரச்னை.
  • ஆனால், இது வெறும் 3 ஆண்டு போர் மட்டுமே.
எழுத்து அளவு:

டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் நடவடிக்கை மூலம் ரஷ்யாவுக்கு உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் பெரிய படியாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஓவல் அலுவலகத்தில் வன்முறை குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல், பின்னர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக பார்கிறீர்களா? என்ற ஏஎன்ஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறியதாவது:

"ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும்.

"ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவும் இராணுவ வீரர்கள் உள்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள். போர் நிறுத்தத்தை காண நான் விரும்புகிறேன். எனவே இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.

"மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது எளிதானது என்பது உங்களுக்கு தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்னை. ஆனால், இது வெறும் 3 ஆண்டு போர் மட்டுமே. நாங்கள் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். ஜனாதிபதி புதின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி உறுதி; ட்ரம் அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation